Title | : | எஸ்.பி.பி மனைவி யார் தெரியுமா | do you know s p balasubramaniam wife | Tamil Cinema News Tamil News |
Duration | : | 10:30 |
Viewed | : | 1,999,056 |
Published | : | 13-10-2018 |
Source | : | Youtube |
எஸ்.பி.பி மனைவி யார் தெரியுமா | do you know s p balasubramaniam wife | Tamil Cinema News Tamil News
Sarkar Panditaradhyula Balasubrahmanyam (About this sound pronunciation (help·info); born 4 June 1946) mostly referred to as S.P.B. or Balu is an Indian playback singer, music director, actor, dubbing artist and film producer who works predominantly in Telugu, Tamil and Kannada cinema. He has recorded over 40,000 songs in 16 Indian languages. He has garnered six National Film Awards for Best Male Playback Singer for his works in 4 different languages; Telugu, Hindi, Kannada and Tamil; twenty five Andhra Pradesh state Nandi Awards for his works towards Telugu cinema, numerous other state awards from Tamil Nadu and Karnataka. In addition, he garnered the Bollywood Filmfare Award, and six Filmfare Awards South.
He is honored with the Guinness World Record for recording the most number of film scores. In 2012, he received the state Nandamuri Taraka Rama Rao National Award for his contributions to Indian cinema. In 2016, he is honored with the Indian Film Personality of the Year consisting of a Silver Peacock Medal. He is a recipient of civilian awards such as Padmashri (2001) and Padma Bhushan (2011) from the government of India.
எஸ்.பி.பி பிறந்த தினம் ஜீன் 4, 1946. இப்போது 72 வயதாகிறது. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!
ஆயிரக்கணக்கான காதல் “டூயட்” பாட்டுக்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்க்கையிலும் காதல் இடம் பெற்றது. தன் தூரத்து உறவுப்பெண்ணான சாவித்திரியை அவர் காதலித்தார். சாவித்திரியும் அவரை விரும்பினார். இருவருடைய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்தக் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. திருமணத்துக்குத் தடையாக இருந்தது, அந்தஸ்து அல்ல. இருவருடைய கோத்திரமும் ஒன்றாக இருந்தது. ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது ஐதீகம். தூய்மையான காதலுக்கு இந்த பழைய சம்பிரதாயங்கள் தடை போடுவதை பாலசுப்பிரமணியம் விரும்பவில்லை. சாவித்திரியை மணப்பதில் உறுதியோடு இருந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட சாவித்திரியின் பெற்றோர், அவரை பெங்களூருக்கு அழைத்துச்சென்று, சாவித்திரியின் அண்ணன் வீட்டில் “சிறை” வைத்து விட்டனர். காதலியைப் பிரிந்த பாலு, “தேவதாஸ்” ஆனார்! தாடி வளர்த்தார்; சோகமான பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவர் சோகத்தில் இருந்து மீளமுடியவில்லை.
திடீரென்று ஒரு நாள், காதலியை மீட்டு திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
ஒரு நண்பரிடம் கார் வாங்கிக் கொண்டு, பெங்களூருக்கு சென்றார். பெங்களூரிர் ஒரு ஓட்டலில் தங்கிக்கொண்டு, ஒரு ஆள் மூலம் சாவித்திரிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினார். கடிதம் கிடைத்ததும், ஓட்டலுக்குப் போன் செய்து பாலுவுடன் பேசினார், சாவித்திரி. “காலையில் வீட்டு வாசலில் தயாராக இரு. நான் காரில் வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று பாலு கூற, சாவித்திரி “சரி” என்றார்.
அதன்படியே, காரில் சென்று சாவித்திரியை அழைத்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார்.
சென்னையை நெருங்கியபோது, மனதில் ஒரு பயம் வந்தது. “சென்னையில் தங்கினால், சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, பத்திரமான வேறு இடத்துக்குப் போய்விட வேண்டும்” என்று பாலு நினைத்தார். அதன்படி, சென்டிரலில் இருந்து, ரெயில் மூலம் விசாகப்பட்டினத்துக்கு பாலுவும், சாவித்திரியும் சென்றனர். துணைக்கு பாலுவின் நண்பர்கள் உடன் சென்றார்கள்.
இது, பாலுவின் குருவான கோதண்டபாணிக்குத் தெரிந்தது. பாலுவும், சாவித்திரியும் என்ன ஆனார்கள் என்று இருவரின் பெற்றோர்களும் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். மணமக்களையும், பெற்றோரையும் ஒன்று சேர்த்து வைக்க முடிவு செய்தார். பெற்றோர்களிடம் நல்லவிதமாக பேசி, அவர்களை பாலு தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். படபடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, பாலு கதவைத் திறந்தார். சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தந்தையும், கோதண்டபாணியும் நின்று கொண்டிருந்தனர்.
சாவித்திரியைக் கண்டதும், அவருடைய தாயார் கதறி அழுதுகொண்டே ஓடிச்சென்று மகளை கட்டித் தழுவிக்கொண்டார். பாலுவுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் ஆகிவிட்டதால், இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்து கொண்டு, இருவரையும் அழைத்துச் சென்றனர். எனினும் முழு மனதுடன் அவர்களை அங்கீகரிக்கவில்லை.
பாலுவும், சாவித்திரியும் தனிக்குடித்தனம் சென்றனர். உறவினர்கள் உதவி இல்லையென்றாலும், இல்லறத்தை நல்லறமாக நடத்தினர். சாவித்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இசைப் பற்று மிக்கவரான பாலு, அக்குழந்தைக்கு “பல்லவி” என்று பெயர் சூட்டினார்.
Source :
https://en.wikipedia.org/wiki/S._P._B...Source :
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%...Source :
https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி...
SHARE TO YOUR FRIENDS
Scan me